5 வயது சிறுவன் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு பரிதாப பலி!


 வவுனியா - ஓமந்தை, பாலமோட்டை பகுதியில், உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 5 வயது சிறுவன் ஒருவன் இன்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த கந்தலதன் கனிஸன் என்ற 5 வயதுச் சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் தந்தை நிலத்தினை உழுவதற்காக, வாடகைக்கு உழவு இயந்திரத்தினை அழைத்து வந்து உழவு வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது வாடகைக்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட உழவு இயந்திரத்தின் சாரதி, காணி உரிமையாளரது மகனையும், அவரது உறவினரது மகனையும் உழவு இயந்திரத்தில் ஏற்றி வைத்துக்கொண்டு உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த சிறுவன் திடீரென கீழே விழுந்து உழவு இயந்திரத்திற்குள் சிக்குண்டு படுகாயமடைந்த நிலையில், சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.