கடற்கரும்புலி லெப் கேணல் வள்ளுவன் நினைவு சுமந்த கடலிலே காவியம்!!

 

 பயிற்சி முடிந்து காவலரனில் நின்ற வள்ளுவனுக்கு ஆகாய கடல் வெளிச்சமருக்கு செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அச் சமரில் ஏழுபோ் கொண்ட அணிக்குப் பொறுப்பாளனாகச் சென்றான். அச் சமரில் இவனுடன் சென்றவர்களில் ஆறு பேர் வீரச்சாவடைய பாரிய விழுப்புண்ணடைந்து சக போராளிகளால் மீட்க்கப்படுகிறான்.

வைத்தியசாலையிலிருந்தே தன்னுடன் போராடிய சக போராளிகளின்
இழப்புக்கு பழிவாங்க வேண்டுமென்கிற அவாவுடன் தன்னை கரும்புலிகளனிக்கு இணைத்து விடுமாறும் தனது நிலையை விளக்கி தலைவர் அவர்களுக்கு நீண்ட கடிதம் அனுப்பினான். அதன் பின்னர் நிதித்துறைக்கு சென்றவன் அங்கும் தனது வேலைப் பளுவுக்கும் மத்தியிலும் தலைவர் அவர்களுக்கான தனது கடிதத்தை எழுதிக் கொண்டேயிருந்தான். இறுதியில் அவனது முயற்சியில் வெற்றியும் பெற்றான்.அதற்கமைவாக கடற்கரும்புலிகளனியில் இணைக்கப்பட்டான். கடற்கரும்புலிகளணியில் இணைந்து கடற் பயிற்சிகளில் ஈடுபட்டான். வள்ளுவனுக்கு கடற்பயிற்சிகள் முற்றிலும் மாறுபட்டிருந்ததோடு மிகவும் கஸ்ரமாகவும் இருந்தது இருந்தாலும் அவனின் பழிதீர்க்கும் எண்ணத்தை நினைக்கும்போது அது இலகுவாகவே இருந்தது. இவனது திறமையான செயற்பாட்டாலும் தொலைத்தொடர்புக் கருவிகளை இலகுவாகக் கையாளத்தெரிந்ததால் தொலைத் தொடர்புத்துறைக்கு உள்வாங்கப்பட்டு மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தொலைத்தொடர்பு நிலையத்திற்க்குச் சென்று அங்கே கடல் நிலவரங்களையும் கற்றான்.இவனது செயற்பாடுகளை அவதானித்த சிறப்புத் தளபதி சூசை அவர்களால் விநியோக நடவடிக்கைக்கு ஒரு படகின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டான். காலப்போக்கில் விநியோகத் தொகுதியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அதில் செவ்வனவே பணியாற்றியதோடு ஒவ்வொரு போராளிகளின் திறமைகளை சிறப்புத் தளபதியிடம் கூறி அப்போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.


லெப். கேணல் றோசா அவர்கள் ஒரு படகின் கட்டளை அதிகாரியாக விநியோக நடவடிக்கையில் செயற்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அவரது செயற்பாடுகளை சிறப்புத் தளபதியிடம் தெரிவித்து விநியோக தொகுதியின் கட்டளை அதிகாரியாக நியமித்ததில் பெரும்பங்காற்றியதோடு நின்றுவிடாமல் தானும் கூடவே சென்று வழிகாட்டினான். (லெப். கேணல் றோசா அவர்களே முதலாவதாக கடற்புலிகளின் மகளிர் படையணியின் விநியோகத் தொகுதியின் கட்டளை அதிகாரியாவார்.)


கடற்புலிகளினால் கடலில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான வலிந்த தாக்குதல்களிலும் கட்டளை அதிகாரியாக பங்காற்றினான். ஓய்வு நேரங்களில் போராளிகளுக்கு தொலைத்தொடர்புக் கருவிகள் சம்பந்தமாக வகுப்புகள் எடுப்பதிலும் செலவிட்டான். விளையாட்டுகளிலும் குறிப்பாக சதுரங்கம் விளையாட்டை ஒவ்வொரு போராளிகளுக்கும் சொல்லிக்கொடுத்தான். கடல் வரைபடத்திலும் பூரண அறிவையும் பெற்றிருந்ததால் கடற் சண்டைகளில் சிறப்பு தளபதியுடன் கட்டளை மையத்திலிருந்தும் சிறப்புத் தளபதியுடன் ஆலோசித்து கட்டளைகளையும் வழங்கிய வள்ளுவன்.


இப்படியாக பல்வேறு ஆளுமையின் வடிவமாக விளங்கினான். ஒவ்வொரு வேலைகளிலும் கண்ணும் கருத்துமாக அதன் சாதக பாதக நிலைகளை கூர்ந்து கவனித்து அதற்கேற்ப செயற்பட்டவன். உதாரணமாக விநியோக நடவடிக்கையின் போது ஒவ்வொரு போராளியின் பெயர்களையும் கூப்பிட்டு அவர்களையும் உசார் நிலையில் இருக்க வைப்பான். கடற்புலிகளின் வளர்ச்சியில் வள்ளுவனுக்கென்று தனியிடம் உண்டு என்று கூறுவதில் மிகையாகாது. இப்படியாக வள்ளுவனைப் பற்றி கூறிக்கொண்டேபோகலாம்.


09.11.1998 அன்று முல்லைத்தீவுக் கடற் பரப்பில் விநியோகப் பாதுகாப்புப் பணிியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் விநியோக அணிகள் மீது தாக்குதல் நடாத்த வந்த கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை பின்வாங்க வைத்துவிட்டு மறுபடியும் தாக்குதலுக்காக ஒருங்கினைத்துக் கொண்டிருந்த வேளையில் தொலைத்தொடர்பு கருவிகள் ஒழுங்கான முறையில் இயங்காததாலும் காலநிலை சீரின்மையாலும் வள்ளுவனின் படகு தனித்து நின்று சண்டையிட்டு விநியோகப் படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்து இறுதிவரை போரிட்டு வீரச்சாவடைகிறான்.

கடற்கரும்புலியாகி தன் காலக்கடமையையும் முடித்துக்கொண்டான்.
"கடலிலே காவியம் படைப்போம்"
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.