சுப்பர் ஸ்டார் நடித்த 'அண்ணாத்த’ திரை விமர்சனம்!!

 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பெரிய உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு பிறகு தீபாவளி தினமான இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் ரஜினி அநியாயத்தை தட்டி கேட்டு அடிதடி சண்டையில் ஈடுபட்டு வருகிறார். ரஜினிகாந்தின் தங்கை கீர்த்தி சுரேஷ் வெளியூரில் தங்கி படிக்கிறார். கீர்த்தி சுரேஷ் மீது அதிக பாசமாக இருக்கிறார் ரஜினி.

கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். திருமணம் செய்து வைக்கும் நிலையில் பிரச்சனை ஏற்படுகிறது. ரஜினிக்கு வந்த பிரச்சனை என்ன? அதை எப்படி சமாளித்தார்? இறுதியில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காளையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினி காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என தனக்கே உரிய பாணியில் அசத்தி இருக்கிறார். ரஜினிக்கு தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்து இருக்கிறார்.

குஷ்பு, மீனா, வழக்கறிஞராக வரும் நயன்தாரா, வில்லனாக வரும் ஜெகபதி பாபு ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் படங்கள் பல படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் அண்ணாத்த படமும் இடம்பெற்றுள்ளது. படத்தின் முதல் பாதி பெரிதாக கவரவில்லை. இரண்டாம் பாதியில் படம் விறுவிறுப்பாக செல்கிறது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே டி. இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. வெற்றியின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கி உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.