முரண்பாடான கருத்தில் ‘சீன உரம்’

 


சீன உரத்தை மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனம் மீள்பரிசோதனை செய்தாலும், தாவர தடுப்புக் காப்பு சேவையின் விதிமுறைகளின்படி நிராகரிக்கப்பட்ட உரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்ச்சையை ஏற்படுத்திய சீன உர கையிருப்பின் தரம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள, சீன உர நிறுவனமும், விவசாய அமைச்சும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் சி செங்கோங் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மகா விகாரைக்கு நேற்று (14) விஜயம் செய்திருந்தபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சீன உரக் கப்பல் இன்னமும் பேருவளைக்கும் களுத்துறைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் தரித்து நிற்பதாகக் கப்பல் போக்குவரத்து தொடர்பான தகவல்களை அறிக்கையிடும், மரைன் ட்ரெஃபிக் இணையத்தளம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.