டயனா உயர் நீதிமன்றில் மனு

 


தனது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மேற்கொண்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான டயனா கமகே, 20ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

இதனையடுத்து அவரது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று குழுவின் ஆலோசனைக்கமைய கட்சியின் நிறைவேற்றுக்குழு கடந்த மாதம் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.