பிரபல அழகிகள் மரணத்தில் திடீர் திருப்பம்!!

 


மிஸ் கேரளா அழகிகள் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பொலிசார், விபத்தில் முன் அவர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்வின் சிசிரிவி காட்சிகள் மறைக்கப்பட்டதை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த சில தினங்களின் முன்னர் நண்பிகளான குறித்த அழகிகள் இருவரும் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. உயிரிழந்த இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் பெற்றவர் அன்சி கபீர், இரண்டாவது இடத்தை பிடித்தவர் அஞ்சனா ஷாஜன். இருவருமே கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்தவர்கள்.

இருவரும் கடந்த 1ஆம் திகதி அதிகாலை 1 மணி அளவில் எர்ணாகுளம் நோக்கி காரில் தங்களின் ஆண் நண்பர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது , மோட்டார் சைக்கிளுள் ஒன்றுடன மோதும் நிலைமையை தவிர்ப்பதற்காக, வாகனத்தை திருப்ப கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியது. அன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஷாஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஆண்நண்பர்களில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் இன்னொருவர் இலேசான காயமடைந்தார்.



இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிசார், விபத்தின் முன்னர் அழகிகள் குழுவினர் டிஜே பார்ட்டி ஒன்றிலிருந்து திரும்பியதை கண்டறிந்த நிலையில், விருந்து நடந்த ஹொட்டலில் இரண்டு முறை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.

ஃபோர்ட் கொச்சியில் உள்ள ‘நம்பர் 18’ ஹோட்டலில் , விபத்து நடந்த தினத்தன்று டிஜே பார்ட்டி நடந்த மண்டபத்தின் சிசிடிவி காட்சிகள் அடங்கிய டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை உரிமையாளர் எடுத்து சென்றுமை ஹோட்டல் ஊழியர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்த போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தின் அருகே கிடைத்த சிசிடிவி காட்சிகளில், அன்சியும் அஞ்சனாவும் பயணித்த காரை ஆடி கார் துரத்துவது தெரிந்தது. அன்சியின் காரை பின்தொடர்ந்தவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தியபோது, ​​அன்சியும் அவரது தோழிகளும் குடிபோதையில் இருந்ததால் தாம் எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

எனினும், அஞ்சனாவும் அன்சியும் பங்கேற்ற அதே விருந்தில் இவர்கள் கலந்து கொண்டார்களா என்றும், அவர்களுக்குள் மோதலின் சாத்தியக்கூறுகள் குறித்தும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.



ஏற்கனவே மதுக்கடை மற்றும் பிற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் சேகரித்த போதும் டிஜே பார்ட்டி மண்டபம் மற்றும் பார்க்கிங் ஏரியாவில் மட்டும் காட்சிகள் அடங்கிய டிவிஆரை ஹொட்டல் உரிமையாளர் மறைத்ததால் பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.

மண்டபத்தில் நடந்த டிஜே பார்ட்டியில் கலந்து கொண்ட உடனேயே அன்சியும் அவளுடைய தோழிகளும் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை காட்சிகள் புலப்படுத்துகின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு முறை பொலிஸார் அங்கு சென்று ஆய்வு செய்த போதும், ஹோட்டல் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையிலும், மண்டபத்தின் காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர் மறைக்கப்பட்டதில் உரிமையாளரின் தொடர்பு தெரியவந்தது.

பேஷன் துறையில் அவர் நுழைவதில் அவரது உறவினர்கள் பலர் முரண்பட்டாலும், அவரது பெற்றோர் கபீரும் ரசீனாவும் தங்கள் ஒரே மகளின் அனைத்து முயற்சிகளிலும் எப்போதும் ஆதரவாக இருந்தனர். இதன் காரணமாக மிஸ் கேரளா போட்டியில், பட்டம் வென்றிருந்த அன்சிக்கு சினிமா துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்ததாக கூறப்படுகின்றது.

முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்ற திருச்சூரை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான அஞ்சனா ஷாஜன் (26) மாடலிங் துறையில் முன் அனுபவம் உள்ளவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.