கடற்படைக்கு பயந்து கடலுக்குள் பாய்ந்தவர் மரணம்!


கிளிநொச்சி பூநகரி - கௌதாரிமுனை கடற்கரையில் சடலமொன்று மீட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலமாக மீட்கப்பட்டவர் பாசையூரை சேர்ந்த காணாமல்போன மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பூநகரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சடலத்தை மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவர் கடற்படையினரை கண்டதும் கடலில் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த பாசையூரை சேர்ந்த மீனவர் என தொியவந்துள்ளது.

இதேவேளை யாழ்.மண்டைதீவு - பூவரசந்தீவு கடற்பகுதியில் கடற்படையினர் வருவதை கண்டதும் கடலில் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த மீனவர் காணாமல்போயுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பூவரசந்தீவின் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக கடற்படையினர் பதுங்கியிருந்துள்ளனர்.

இதன்போது படகு ஒன்று கரையை நோக்கி வருவதை அவதானித்த கடற்படையினர் அதனை சுற்றிவளைக்க தயாரானபோது படகிலிருந்தவர் கடலில் பாய்ந்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு கடலில் குதித்தவரே சடலமாக மீட்ப்பட்டுள்ள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.