மகன் இறந்து நான்கு நாள்களில் தாயும் உயிரிழப்பு!
மாத்தளை- பலாபத்வல பிரதேசத்தில் மகன் இறந்து நான்கு நாள்களில் மாரடைப்பு காரணமாக, அவரது தாய் உயிரிழந்த சம்பவம்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 41 வயதான கிர்ஷாந்தனும் அவரது தாயாரான 59 வயதான பொன்செல்வி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனது இறப்பையடுத்து, குறித்த தாய் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் மாத்தளை பிரதேச இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமானவர் என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாய் மற்றும் மகனது இறுதிக்கிரியைகள் இன்று மாத்தளை- வாவன்னாவத்த பொது மையானத்தில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை