ராம்நாத் கோவிந்தின் தீபாவளி வாழ்த்து செய்தி!!


தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தீமையை நன்மையும் இருளை ஒளியும் வென்றமைக்கு தீபாவளி பண்டிகை அடையாளமாகத் திகழ்கிறது.

சமூகத்தில் வெவேறு நம்பிக்கைகளைக் கொண்ட பல்வேறு பிரிவினரால் இந்த பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.  அன்பு, தோழமை, சகோதரத்துவத்தை பரஸ்பரம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த நன்னாள் நமக்கு வழங்குகிறது.

உண்மையில் இது நமது வளம் மற்றும் மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் தருணமாகும். இந்தியர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.