பேஸ்புக் இன் புதிய அறிவிப்பு!!
பேஸ்புக் இல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் முகங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் (facial recognition software) மென்பொருளை பயன்படுத்தப்போவதில்லை என பேஸ்புக் அறிவித்துள்ளது.
முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் பற்றிய கவலைகள் அதிகரித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தெளிவான விதிகளை கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் வழங்கவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அதன் பயனர்கள் மீதான தாக்கம் குறித்து சரமாரியான விமர்சனங்களை பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டதனாலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ற
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை