கோட்டபாய தங்கியுள்ள ஹோட்டலுக்கருகில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!!

 


காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகர் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே விடுதியை சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளாஸ்கோ நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotelஇல் மாநாட்டில் கலந்துகொள்ள பல உலகத் தலைவர்கள் வந்து அங்கு தங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், அங்கு தங்கியுள்ள கோட்டாபயவுக்கு எதிராக இன்று அதிகாலை முதல், புலம்பெயர் தமிழர்கள் கோஷங்களை எழுப்பி எமது எதிர்ப்புக்களைத் தெரிவித்துக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய தங்கியிருந்த ஹோட்டலிற்கு கடும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.