கோட்டாபயவுக்கு அனுப்பப்பட்ட கடிதம்!


நாட்டின் 2022 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அவதானம் செலுத்தாவிடின், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடபோவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறித்த சம்மேளனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு (Gotabaya Rajapaksa) கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இலங்கையில் உள்ள அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும் இதனால் 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்களும் அவர்களை நம்பி வாழும் ஏறக்குறைய 6 மில்லியன் மக்களும் வாழ்க்கையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் 58ஆயிரம் ரூபாய் அவசியம் என அண்மைய கணக்கெடுப்பொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்ததெனவும் எனினும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்து வருவதால் இந்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.