Starlink இணையச் சேவை இலங்கையில்!!
இலங்கையில் Starlink இணையச் சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (டிஆர்சி) தனது டுவிட்டர் செய்தியில், ஸ்பேஸ் எக்ஸ் ( SpaceX )நிறுவனத்துடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, ஒழுங்குபடுத்தும் விடயங்கள் மற்றும் இந்தச் சேவைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் தொடர்பாக முதன்மையாக கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
.jpeg
)





கருத்துகள் இல்லை