யாழ் இளம்பெண்ணின் கடத்தல் தொடர்பில் வெளியான தகவல்!


யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இளம் யுவதியொருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக, உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் யுவதி, பணிக்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டார்.

குறித்த யுவதி அவரது சகோதரனின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வாகனத்தில் வந்த இளைஞர் குழுவினர், சகோதரனை தாக்கி விட்டு, யுவதியை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, யுவதியின் குடும்பத்தினரால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, காதல் விவகாரம் ஒன்றை தொடர்ந்தே இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் வைத்தியசாலையில் பணிபுரியும் யுவதியை, ஏழாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரே கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞன் ஒரு தலை காதலன் என்றும், யுவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், பலவந்தமாக கடத்திச் சென்றதாகவும், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சகோதரனை தாக்கி, யுவதியை ஏற்றிச் சென்றதால், அது கடத்தல் வழக்காக பொலிசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட இளைஞன் தரப்பினர், யுவதியும், தானும் காதலர்கள் என்றும், நேற்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாவோம் என்றும் குறிப்பிட்டிருந்த போதும் , நேற்று அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகவில்லை.

எனினும் இன்று காலை அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுவதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண்ணிர்கு பெற்றோர் வற்புறுத்தி வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்த நிலையில் , வரும் 15ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதெவேளை , நிச்சயிக்கப்பட்ட வெளிநாட்டு மாப்பிள்ளை ஓரிரு தினங்களின் முன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.