யாழ்.இந்துகல்லூரியின் மைதானம் வெள்ளக்காடானது!

 


யாழ்.குடாநாட்டில் கடும் மழையின் காரணமாக நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கி காட்சியளிக்கின்றது.

யாழ்.குடாநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பொழிவதோடு இன்று அதிகாலை முதல் அடை மழை பொழிகின்றது.

இதனால் நகரின் மத்தியில் உள்ள 43 குளங்களும் நிரம்பி வழிகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்.இந்து கல்லூரி மைதானம் அதிக மழை காரணமாக குளம் போல காட்சியளிக்கின்றது.

இது குறித்த புகைப்படங்களை முகநூலில் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார். இதனை முகநூலில் பார்த்த நெட்டிசன்கள் இது யாழ்.இந்து கல்லூரி மைதானமா... இல்லை யாழ்.குளமான என விமர்ச்சித்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.