மகளிடம் சேட்டைவிட்டவரின் காதை அறுத்த தந்தை!
கிளிநொச்சியில் தனது 12 வயதான மகளிடம் சேட்டை விட்ட நபரின் காதை அறுத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட தருமபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் உறவினர்கள் இல்லாத சிறுமிய்டம் சேட்டை புரிந்த அயல் வீட்டு குடும்பஸ்தரே இவ்வாறு காதறுபட்டுள்ளார்.
அதொடு , கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் பொதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தந்தையான சந்தேக நபரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளதுடன் வெட்டப்பட்ட வாளும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடரபாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
.jpeg
)





கருத்துகள் இல்லை