லிந்துலை- லென்தோமஸ் தோட்டத்தில் மண் சரிவு!!

 


லிந்துலை- லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் லயக்குடியிருப்பு ஒன்றின் மீது, மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால், நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களை சேர்ந்த 21 பேர் தற்போதும் தத்தமது வீடுகளிலேயே தங்கியுள்ளனர். அதோடு அங்குள்ள ஏனைய வீடுகளுக்கும் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக தாம் அச்சநிலையோடு இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு பெற்று தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.