மைத்திரி இராஜாங்க அமைச்சர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டு!!
சில இராஜாங்க அமைச்சர்கள் தனக்கு எதிராகச் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறம் சுமத்தியுள்ளார். பக்கமுன நகரில் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்திக்கச் சென்றிருந்தபோதே அவர் இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "விவசாயிகள் குறித்து தற்போதைய அரசிடம் நான் எந்தளவுக்குப் பேசினாலும் அரசு செவிமடுப்பதில்லை. கமத்தொழில் அமைச்சர் விவசாயத்தை அறிந்தவர் அல்ல என்றும் , விவசாயிகளில் பசளைப் பிரச்சினை பற்றி அவரிடம் தான் பேசியபோதும் சாதகமான பதில் கிடைக்கவில்லை வென்றும் அவர் குறிப்பிட்டார்.
சில இராஜாங்க அமைச்சர்கள் எனக்கு எதிராகச் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை காரணமாக என்னால், பொலனறுவைக்குச் செல்ல முடியாதுள்ளது என நான் கூறினேன். அதனை அடிப்படையாகக்கொண்டே இராஜாங்க அமைச்சர்கள் எனக்கு எதிராகச் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாகவும் எனினும் அவற்றை நான் கவனத்தில்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது சிறிசேனவிடம் கேள்வி ஒன்றை எழுப்பிய விவசாயி ஒருவர், 'நீங்கள் மீண்டும் பதவிக்கு வந்தால் விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?' எனக் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த மைத்திரிபால,
"நான் விவசாயிகளை கஷ்டத்தில் தள்ளமாட்டேன். சேதனப் பசளை மூலம் நெல்லைப் பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்குப் படிப்படியாகப் பழக்கப்படுத்துவேன். உலகில் எந்த நாடும் நூற்றுக்கு நூறு வீதம் சேதனப் பசளையைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதில்லை என சுட்டிக்காட்டினார்.
ஆஸ்திரேலியா கூட சுமார் 50 வீதமே சேதனப் பசளையைப் பயன்படுத்தும் விவசாயத்தைச் செய்கின்றது. நான் 1980ஆம் ஆண்டுகளில் இருந்து விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்து வருகின்றேன்.
மேலும் விவசாயிகள் விஷத்தை அருந்தி தற்கொலை செய்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் நான், விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காகப் பொலனறுவை நகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி முதல் முறையாகச் சவப் பெட்டிகளைக் கூடச் சுமந்ததாகவும் அவர் கூறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை