யாழ்.நல்லூர் இராசதானி கால தொன்மங்கள் பாதுகாப்பு!!


 யாழ்ப்பாணத்தில் உள்ள இராசதானி காலத்து தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் யாழ் விஜயத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் இந்த விடயம் எடுத்துரைக்கப்பட்டது.

அதன்படி நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளை கொண்ட யாழ்ப்பாண மாவட்டமானது, ஏராளமான தொன்மங்களை கொண்டுள்ளது.

அவற்றை பாதுகாப்பது எமது மூதாதையருக்கும், அடுத்துவரும் சந்ததிக்கும் நாம் செய்யும் கடமை என அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.