நாடாளுமன்றத்தில் வாய்ச்சண்டை!!
சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் (S. Shritharan) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனுக்கு (Kulasingam Thileepan) ஒரு ஒருவர் மாறி மாறி தீட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனை கீழ்த்தரமான அரசியல்வாதியென திட்டித்தீர்த்த நிலையில் அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நகைகளை உருவிக் கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் ஓடியவர், நாடாளுமன்ற உறுப்பினராக எந்த தகுதியும் சிறிதரனுக்கு இல்லையென கு.திலீபன் சாடினார்.
வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (17) கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி மாவட்ட ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், எம்.ஏ.சுமந்திரனை (M.A. Sumanthiran) ஈழத்து சீமான் (Seeman) என குறிப்பிட்டார்.
விளைந்த நெல் வயலுக்குள் ஏர்பூட்டி போட்டோசூட் நடத்தியதை சுட்டிக்காட்டினார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை, (Shanakiya Rasamanickam) மொஹமட் சாணக்கியன் என தனது உரையில் கூறியிருந்தார். தவறுதலாக உச்சரிப்பதை போல, வேண்டுமென்ற இரண்டு முறை அப்படி குறிப்பிட்டார்.
இதன்போது எழுந்த சி.சிறிதரன் எம்.பி, சாணக்கியன் சபையில்லை. இராசமாணிக்கம் இராஜபுத்திர சாணக்கியன் என்கிற பெயரை மாற்றி மொஹமட் சாணக்கியன் என திலீபன் தனது உரையில் கூறுகிறார். இதுவொரு கீழ்த்தரமான செயலாகும்.
அதனால், இதனை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை தவறாக கூறுவது நாடாளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு முரணானது என்றார். இந்த (திலீபன்) படிக்காத முட்டாளான நாடாளுமன்ற உறுப்பினரை திருத்த வேண்டும் என்றார்.
இதன்போது, இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நகைகளை உருவிக் கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஓடியவர், செஞ்சோலையை புலிகளின் பயிற்சி முகாமென காட்டிக் கொடுத்து, குண்டுத் தாக்குதல் நடத்த காரணமாக இருந்தவர், இவரெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியில்லாதவர் என திலீபன் எம்.பி குறிப்பிட்டார்.
மேலும், இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனுக்கு வாடா போடா ன ஒருமையிலும் திட்டிக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை