சீன நிறுவனம் மக்கள் வங்கி தொடர்பில் சீற்றம்!!

 


சேதனப் பசளை தொகைக்கு இலங்கை மக்கள் வழங்கி வெளியிட்ட கடன் பத்திரத்திற்கான பணத்தை செலுத்தி விட்டதாக சீனாவின் Qingdao Seawin Biotech Group Company Ltd நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், இலங்கை மக்கள் வங்கி புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த முடியாது என சீன நிறுவனத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது நிறுவனம் சீனாவின் பிரதான பசளை நிறுவனத்தின் விலை மனு நடைமுறைகளுக்கு அமைய பசளை தொகையை பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசளையின் தரம் சம்பந்தமாக பிரச்சினை இருந்தால், இரண்டு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கையை அமைய சிக்கலை அதன் சரத்திற்கு அமைய நட்பான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதனை அடிப்படையாகக் கொண்டு பணம் செலுத்துவதை இடைநிறுத்த மக்கள் வங்கிக்கு எந்த உரிமையுமில்லை எனவும் பசளைக்கான பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.