பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!


யாழில் நபர் ஒருவரின் தானியங்கி பணக் கொடுக்கல் வாங்கல் அட்டையை பயன்படுத்தி சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய இருவரின் புகைபடங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இருவர் குறித்து தகவல் வழங்குமாறு யாழ்ப்பாண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

உரும்பிராய் பகுதியில் தனிநபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் தானியங்கி பணப்பரிமாற்றல் அட்டை காணாமற்போனமை தொடர்பாக வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் நிதி மீளப்பெறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, குறித்த வங்கிக்கு சென்று வினவியதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் வழங்கினார்.

இதேவேளை, வங்கியின் உதவியுடன் பணத்தை மீளப்பெற்ற இருவர் தொடர்பான ஒளிப்படங்களைப் பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்று சில மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்படாத காரணத்தால், பொதுமக்களின் உதவியைக் கோருவதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பழிகக்கார கேட்டுள்ளார்.

மேலும், புகைப்படத்தில் இருக்கும் இருவர் தொடர்பில் தகவல்கள் எதேனும் தெரிந்தால் யாழ்.தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் (0718591329) என்ற அலைபேசிக்குத் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.