மின்சாரம் தடைப்பட்டால் நீர் விநியோகமும் தடைப்படும் – உபாலி!!
மின்சார சபை ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை மின்சார சபையினால் ஏற்பட்ட மின்தடைகளை சீர்செய்ய முடியாவிட்டால் நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டுக் கூட்டணியின் அழைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து நீரேற்று நிலையங்களும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் மின்சாரம் மூலம் இயக்கப்படுகின்றன என்றும் மின்தடைகளை சீர்செய்ய முடியாவிட்டால், தேவையான மின்சாரம் கிடைக்க மாற்று நடவடிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குடிநீர் வாரியத்தில் ஏதேனும் மின் தடை ஏற்பட்டால், குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை