நாளை முதல் சகல வகுப்புகளும் பாடசாலைகளில் ஆரம்பம்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த விடயம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும் 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து, கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை