சீன கப்பல் கொழும்பு துறைமுகத்தை அண்மித்து திரும்பியது!


கொழும்பு துறைமுக நுழைவுப் பகுதியை அண்மித்து, சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் 'ஹிப்போ ஸ்பிரிட் ' கப்பல் அல்லது செயோ எக்ஸ்புளோரர் எனும் பெயரால் அறியப்படும் கப்பல் அண்மித்த திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து சேதனப் பசளையை இலங்கைக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள குவிங்டாவோ சீவிங் பயோடெக் குறூப் லிமிடட் நிறுவனம், தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்திடமிருந்து மூன்று நாட்களுக்குள் 8 மில்லியன் அமரிக்க டொலர்களை கோரி ' லெட்டர் ஒப் டிமான்ட்' என பரவலாக அறியப்படும் இழப்பீட்டு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளது.

சட்டத்தரணி எம்.ஜே.எஸ். பொன்சேகா ஊடாக, தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலைய பிரதிப் பணிப்பாளர் டப்ளியூ.ஏ.ஆர்.டி. விக்ரமாராச்சியை விழித்து இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது.

தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தின் அலட்சிய நடவடிக்கையால், தமது நிறுவனத்தின் நற் பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக இந்த தொகையை குறித்த நிறுவனம் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த இழப்பீட்டு கோரிக்கை கடிதம் தொடர்பாக விவசாய பணிப்பாளர் அஜந்த டி சில்வாவிடம் வினவிய போதும், தனிப்பட்ட ரீதியில் அவ்வாறான கடிதம் ஒன்று கிடைத்துள்ளமை தொடர்பில் தான் அறியவில்லை என தெரிவித்தார்.

இதனிடையே, சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் ' ஹிப்போ ஸ்பிரிட் ' கப்பல் அல்லது செயோ எக்ஸ்புளோரர் எனும் பெயரால் அறியப்படும் கப்பல் பேருவளை கடலில் அவதானிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நுழைவுப் பகுதிக்கு அப்பால் உள்ள கடலுக்கு சென்றுள்ள இந்த கப்பல், அங்கு நக்கூரமிட்டு தண்ணீர் உள்ளிட்ட தேவையான பொருட்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து பெற்றுக்கொண்டு மீள களுத்துறை - பேருவளை கடல் பரப்பில் மிதந்துகொண்டிருப்பதாக துறைமுக மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.

குவிங்டாவோ சீவிங் பயோடெக் குறூப் லிமிடட் நிறுவனத்துடன் சேதனப் பசளை இறக்குமதி ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும், தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம், சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் அடங்கியுள்ளதாக மாதிரிகளை பரிசோதித்து கண்டறிந்தது.

இரு முறை இடம்பெற்ற பரிசோதனைகளில் அது உறுதி செய்யப்பட்ட நிலையில் இலங்கை குறித்த சேதனப் பசளையை நிராகரித்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.