பிரபல கர் நாடக இசைக் கலைஞர் சிவசக்தி லண்டனில் மரணம்!!

 


இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன்  லண்டனில்  நேற்று முன் தினம் காலமானார்.

லண்டன் பாரதிய வித்ய பவனில் மூன்று தசாப்தங் களுக்கு மேலாக வாய்ப் பாட்டு, வீணை ஆசிரியையாகத் திகழ்ந்த இலங்கையரான சிவசக்தி, லண்டனில் அதிகளவு மாணவ மாணவிகளை வாய்ப்பாட்டிலும் வீணையிலும் அரங்கேற்றியவர்.

அதோடு பாரதிய வித்ய பவனின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் சிவசக்தியின் பாட்டு தனியான இடத்தைப் பெற்றது. ‘வாணி பைன் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனத்தையும் சிவசக்தி தனது கணவர் சிவநேசனுடன் நிர்வகித்து வந்தார்.

யாழ்ப்பாணம் என். வீரமணி ஐயரின் மாணவியான சிவசக்தி, வீரமணி ஐயரின் ஆக்கங்கள் அனைத்தை யும் பிரசுரிப் பதில் எடுத்த முயற்சி பெரிதானது.

வீரமணி ஐயரின் கீர்த்தனைகளை மேடைகளில் பிரபலமடையச் செய்வதிலும் அவர் பெரும் அக்கறை கொண்டிருந்ததுடன் பல நற்பணிகளுக்கான நிதியுதவியிலும் அவர் துணை புரிந்தார்.

மேலும் யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியிலும் சிவசக்தி பணியாற்றிருந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கலை கூறிவருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.