327 இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கிய சுவிஸ்!


இலங்கை தமிழர்கள் 327 பேருக்கு சுவிஸ் அரசாங்கத்தால் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்து அரசிடம் இலங்கை பாதுகாப்பு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸாரினால் மரண அச்சுறுத்தல் மற்றும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக, குறித்த இலங்கை தமிழர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தஞ்சம் பெற்றவர்கள் யார் என சுவிட்ஸர்லாந்து அரசு இதுவரையில் தகவல் வெளியிடவில்லை. எனினும் 17 இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க சுவிட்ஸர்லாந்து அரசு நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த இலங்கையர்கள் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் இலங்கை அரசிடம் சுவிஸ் குடிவரவு திணைக்களம் வினவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரிச் நகரத்தில் மொழி மாற்றம் செய்யும் ஒருவரால் இந்த நபர்களுக்கு அரசியல் தஞ்சம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த நபரால் அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.