சுவீடனின் முதல் பெண் பிரதமர் பதவி விலகினார்!

 


பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே தான் பதவி விலகுவதாக, சுவீடனின் முதல் பெண் பிரதமர் மக்டேலேனா ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.

மக்டேலேனா ஆண்டர்சனின், கூட்டணி கட்சி, அரசாங்கத்திலிருந்து விலகியதால் அவரும் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

தாங்கள் முன்மொழிந்த வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவிக்கவில்லை என்ற காரணத்தால் க்ரீன் கட்சி, கூட்டணியிலிருந்து விலகியது.

சுவீடன் பிரதமராகவும், சமூக ஜனநாயக கட்சித் தலைவராகவும் இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.

இதையடுத்து, நேற்று (புதன்கிழமை) சுவீடனின் சட்ட நடைமுறைப்படி அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கை பெற்று மக்டெலெனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுவீடனின் பெண் வாக்காளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு 100 வருடங்களுக்கு பிறகு 54 வயதாகும் சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த மக்டெலெனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்டேலேனா ஆண்டர்சனின் பதவி விலகலுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கட்சி தலைவர்களிடம் ஆலோசிக்கப்படும் என நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் குறித்து மக்டேலேனா ஆண்டர்சன் கூறுகையில், ‘நான் பதவி விலக விரும்பவதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தேன். எதிர்காலத்தில் கூட்டணி எதுவும் இல்லாம் ஒரே கட்சியின் ஆட்சியில் நான் பிரதமர் பதவியை வகிப்பேன் என்று நம்புகிறேன்.

அரசமைப்பின்படி கூட்டணியில் உள்ள ஒரு கட்சி விலகினால் மற்றொரு கட்சி பதவியிலிருந்து விலக வேண்டும். இந்த அரசாங்கம் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளதா என்று கேள்விகள் எழும் அரசாங்கத்தை நான் வழிநடத்த விரும்பவில்லை’ என கூறினார்.

முன்னாள் நீச்சல் வீராங்கனையான மக்டேலேனா 1996ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார். அப்போதைய பிரதமரான கோரன் பெர்சனுக்கு அரசியல் ஆலோசகராக அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

கடந்த ஏழு வருடங்களாக நிதியமைச்சர் பதவி வகித்து வருகிறார். மக்டேலேனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக அதுவரை பெண் பிரதமர் இல்லாத ஒரே நார்டிக் நாடாக சுவீடன் இருந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.