கூட்டமைப்பு - சீனா தூதர் திடீர் சந்திப்பு!!

 


தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இலங்கைக்கான சீன தூதருக்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நாளை அந்த சந்திப்பு நடக்கலாமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மிக முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று இந்திய தூதருடன் சந்திப்பு இடம்பெறவிருந்தது. எனினும், அது ஒத்திவைக்கப்பட்டு, நாளை (11) மாலை இடம்பெறவுள்ளது. இன்று மாலை சுவிற்சர்லாந்து தூதுக்குழுவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு நடத்துகிறது.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் நடத்த சீன தூதரகம் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்துள்ளது.

இந்த சந்திப்பின் பின்னரே இந்திய தரப்பை கூட்டமைப்பு சந்திப்பு சந்திக்கும். முதற்கட்டமாக, சீன தூதரை, இரா.சம்பந்தன் சந்தித்து பேசுவார் என தமிழரசு கட்சியின் முக்கிய பிரமுகர் உறுதி செய்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.