சுமந்திரனை நாளை தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல அம்பலப்படுத்துவோம் வாரீர்-பிரித்தானியா!

 


அன்பான தமிழ் உறவுகளே...!!

சிங்கள தேசத்தின் அறிவிக்கப்படாத வெளிவிவகார அமைச்சராக வையகம் முழுவதும் தமிழ்மக்கள் சார்பாக என்ற ,போலியான முகத்துடன் ராஜதந்திரிகளை சந்தித்து வரும் சுமந்திரன் நாளை (25/11/21) காலை பிரித்தானியா வருகிறார் .இவர் தமிழ் மக்கள் சார்பாக ராஜதந்திரிகளை சந்திப்பதற்கான பல முயற்சிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன .குறிப்பாக வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்புகளை நடத்த ஏற்பாடாகியுள்ளது. இவர் வெளிவிவகார  அமைச்சைச் சந்திக்கும் பொழுது ,நாங்கள் அனைவரும் வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக ஒட்றுகூடி ,இவர் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல இவர் சிங்கள தேசத்தின் பிரதிநிதி .இவர்கள் தமிழ்மக்கள் ரீதியாக தமிழ் மக்கள் சார்பாக கதைப்பதற்கு எந்த அருகதையும் கிடையாது என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்ய வேண்டிய தார்மீகக் கடமையில் உள்ளோம் ஆகையால் அனைத்து மக்களும் தயாராகுங்கள் இவர் சந்திக்கும் நேரம் தெரிந்தவுடன் நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி நேரிடும் விழிப்புடன் இருப்போம் விடுதலையை வென்றெடுப்போம்

-பிரித்தானியத் தமிழர்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.