வடக்கு கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!!


 வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் இன்று இரவு புதிய தாழமுக்கம் உருவாகவுள்ளதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார்.

இந்த தாழமுக்கம் எதிர்வரும் 16ம் அல்லது 17ம் திகதி வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக அவ்வப்போது தொடர்ந்து மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக முன்னரைப் போல யாழ்.மாவட்டத்திற்கும் ஏனைய பகுதிகளின் கரையோரப் பகுதிகளுக்கும் கன மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்றும் கூறிய அவர், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது உகந்தது எனவும் தெரிவித்துள்ளார். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.