பெண்ணொருவரின் விசித்திரமான செயல்!!

 


பிரேஸில் நாட்டை சேர்ந்த பிரபல மொடல் அழகியான கிறிஸ் கலேரா (Cris Galera) மூன்று மாதங்களுக்கு முன்பு தன்னைதானே திருமணம் செய்துகொண்டு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தன்னை தானே விவாகரத்து செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

31 வயதான மாடல் அழகி கிறிஸ் கலேரா (Cris Galera) கடந்த காலங்களில் உறவு முறிவுகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாக தன்னை தானே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.

அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் தன்னை தானே கிறிஸ் கலேரா(Cris Galera) திருமணம் செய்துகொண்டார்.

தனது வாழ்க்கையில் தனியாக இருக்க பயம் கொள்ளும் சுபாவம் உடைய பெண்ணான் தான் தற்போதைய நிலை குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அதனை உணர்ந்த நிலையில் அதனை கொண்டாட முடிவு செய்து தன்னை தானே திருமணம் செய்துகொண்டதாகவும் கிறிஸ் கலேரா (Cris Galera) அப்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருமணம் செய்துகொண்ட 90 நாட்களுக்குள்ளயே விவாகரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

மிகவும் சிறப்புவாய்ந்த நபர் ஒருவரை சந்தித்ததாகவும் தற்போது காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது என்றும் தெரித்துள்ள அவர், விவாகரத்து செய்துகொள்வது வரை தன்னுடனான தனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் கூறியுள்ளார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.