சிம்புவின் நெகிழ்ச்சியான அறிக்கை!
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம்’ சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே உற்சாகத்தின் எல்லையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் வெற்றி குறித்து சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் ’மாநாடு’
எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.
மாநாடு படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை அள்ளி எடுத்துள்ளது.
இதற்கு காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தைத் தந்த வெங்கட்பிரபு, அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், ’மாநாடு’ படக்குழு, என் தாய் தந்தை, வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்க நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், என் ரத்தமான அன்பு ரசிகர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய நன்றிக்கடன்பட்டுள்ளேன்
நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது
ஆனால் பதிலுக்கு தெரிவிக்க எனக்கு வேறு வார்த்தைகள் இல்லையே
ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளை தரையில் விழ விடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்கு நான் மகிழ்கிறேன்
வெறியோடு உலகம் முழுக்க வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள்
அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்
இவ்வாறு நடிகர் சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை