தலைவரது பிறந்தநாளை கடை உரிமையாளருடன் சேர்ந்து கொண்டாடிய பிரெஞ்சு பெண்மணி!
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நேற்று (26) விடுதலை புலிகளின் தலைவரது பிறந்த நாள் விழா கடைகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஒரு கடையில் தலைவர் படம் வைக்கப்பட்டு இனிப்புக்கள் வழங்கப்பட்டன.
மேலும் குறித்த கடைக்கு வந்த பிரெஞ்சு இன பெண்மணி ஒருவர் இவற்றை அழகாக பார்த்து கொண்டிருந்தார். அவருக்கு இனிப்பு வழங்கிய கடையின் உரிமையாளர் இவர் எங்களின் உயிர் தலைவர் என்று குறித்த பெண்மணியிடம் கூறியுள்ளார்.
அதற்கு ஆச்சரியத்துடன் பார்த்த அந்த பெண்மணி, இவர் எங்களின் பிரான்ஸ் மன்னர் நெப்போலியனை போல் உள்ளார் என்று அடக்கத்துடன் பெருமையாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தான் வீடு சென்று இவற்றை பற்றி தேடி படிக்க போகின்றேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். காலங்கள் செல்ல செல்ல விடுதலை புலிகளின் தலைவர் புகழ் அதிகமாகி கொண்டுதான் செல்கின்றது, நிறைய இனத்தவர்கள் விடுதலை புலிகளின் தலைவரை பற்றி அறிந்து வைத்துள்ளனர் என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சில இடங்களில் நாம் எம்மை தமிழர் என்று அறிமுகப்படுத்தும் போது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி நீ புலியா என்றுதான்… அவ்வளவுக்கு எமது தலைவர் புகழ் உலகம் எல்லாம் ஓங்கி பரவியுள்ளது. தமிழராக பிறக்க என்ன தவம் செய்தமோ நாம் எல்லாம் என்று அடிக்கடி நினைக்க தோன்றுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை