கேரளாவில் இடம்பெற்ற கோர விபத்தில் அழகிகள் பலி!!
இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இன்று இடம்பெற்ற கார் விபத்தில் முன்னாள் மிஸ் கேரளா மற்றும் அழகுராணிகள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பைபாஸ் வீதியில் இன்று அதிகாலை வைற்றிலா அருகே கார் ஒன்று பைக் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டுள்ளது.
இதன்போது காரிலிருந்த 2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற, ஆன்சி கபீர், (Ansi Kabeer) (25 வயது), அழகி போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டம் வென்ற அஞ்சனா ஷாஜன் (Anjana Shajan) ( 26 வயது) ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஆன்சி கபீர் திருவனந்தபுரம் மாவட்டம், ஆட்டிங்கள் அருகே உள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அஞ்சனா ஷாஜன் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவராவார். அத்துடன் அஞ்சனா ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார். அவருக்கு மொடலிங்கில் முன் அனுபவம் இல்லை. எனினும் மிஸ் கேரளா முதல் ரன்னர்-அப் பட்டத்தை அவர் வென்றார்.
அவர்களுடன் காரில் பயணம் செய்த, அவர்களது நண்பர்களான , முகமது ஆசிக் (30), அப்துல் ரஹ்மான் (28 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை