லண்டனில் கல்லறையிலிருந்து நீண்ட விரல்களால் பதற்றம்!!

 


லண்டனில் உள்ள கல்லறை ஒன்றிலிருந்து தீடிரென கைவிரல்கள் மேலெழுந்ததால்  அதனைக் கண்ட நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் காட்டுப் பகுதியைச் சுற்றிப்பார்க்க நபரொருவர் தனியாகச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கல்லறையின் மேலிருந்து, இறந்த உடலின் விரல்கள் வெளியே வரும் திகில் சம்பவத்தை தனது கண்களால் கண்டுள்ளார்.

பயத்தில் உறைந்து போன அந்த நபரால் குறித்த இடத்தை விட்டு கொஞ்சம் கூட அசைய முடியவில்லை. தன்னருகில் என்னை நடக்கிறது என்பதை கண்ணை மூடி மெதுவாக யோசித்துப்பார்த்துள்ளார்.

பின்னர் கல்லறையில் இருந்து வெளியே தோன்றியது இறந்தவரின் விரல்கள் அல்ல,  இறந்த மனிதனின் விரல்கள் போல் தோன்றும் பவளச் செடி என்பது தெரியவந்தது.

மேலும் அந்தச்செடியின் கிளைகள் தரையில் இருந்து கிழித்து கொண்டு வெளியே வரும் என்பதால் பார்ப்பதற்கு மனித உடல்களின் விரல் போல்  இருக்கும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த பவளப்பாறை இறந்த மனிதனின் விரல்கள் என்று அழைக்கப்படுவதாகவும், ஹாலோவீன் வார இறுதியில் பலரை பயமுறுத்த Dead Man's Fingersஐ பயன்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.