யாழில்“இராணுவத்தன் முக்கிய புள்ளி”அருண் சித்தார்த்தன் கைதானார்.


 பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அருண் சித்தார்த்தன் நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் இன்று  (20.11.21) கைது செய்யப்பட்டுள்ளார்.

“இராணுவத்தன் முக்கிய புள்ளி” என தன்னை அழைத்துவரும், சர்ச்சைக்குரிய அருண் சித்தார்த்தன், ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இதேவேளை, இன்று இவரைக் கைது செய்யச் சென்ற போது, யாழ்ப்பாணம் காவற்துறையினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், காவற்துறையினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாகவும், “இராணுவத்தின் முக்கிய புள்ளி” தான் என மிரட்டியதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை  “நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மல சல கூடம் அமைப்பேன்” என இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் முன்பு ஒரு தடவை, கருத்துக்களை இவர் முன்வைத்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.