இறவாத நினவுகளவை - கவிதை!!

 


குண்டானோடை  சட்டி பானை

கூழுக்கு  ஒடியலுமாய்

ஒண்டும் தவறாமை

ஒழுங்கா தயார்படுத்தி

கொண்டு வந்து வைச்சிட்டு

கூட்டப்போவார் அப்பு அயலவையை..//

நிண்டு பாக்கமாட்டா

நீட்டான கலவாய் மீனை

துண்டாடிக் கொண்டு ஆச்சி

துரிதமா கூழ் காச்சி இறக்கிடுவா..//

நண்டு றால். மீனோடை

நாலைஞ்சு மரக்கறியள்

கூட்டி காச்சினதை

குடிக்க பிலாவிலை எடுப்பா..//

அப்பு அயல் வீடுகளை

அழைச்சு வந்து விட்டிட்டு

எடுத்தூத்தணை முட்ட முட்ட

எல்லாருக்கும் குடணை என்பார்..//

அப்பப்ப ஆச்சி அப்பு

தப்பாது சண்டை

அயலவை பிடிக்கப்போனா

அவைக்குடையும் மண்டை...//

மயிர் பிடிச்சு மத்தியானம்

மச்சாள்மார் அடிபாடு.

மறுநாள் மறந்திடுவினம்

மாறிமாறி பேன் எடுப்பினம்..//

அக்காளுக்கு வருத்தமெண்டா

அவளைச்சுத்தி சகோதரங்கள்

எப்பனும் விலகாயினம்.

எழும்புமட்டும் சாப்பிடாயினம்.

அடிபாடு. கிளிபாடு

அடிக்கடி ஊருக்கை.

அடுத்த ஊரார் கை வைச்சா

அடிக்க ஊரே ஒண்டா நிக்கும்..//

இப்பிடித்தான் அப்ப

இருந்தது கிரா வாழ்க்கை.

இனிமேல் நடக்காதவை

#இறவாத நினவுகளவை..//


  தனம் பாலசிங்கம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.