இந்திய பிரதமர் மோடிக்கு வந்த ஞானோதயம்!

 


கடந்த 2020-ல் மூன்று வேளாண் சட்டங்களைக்

கொண்டுவந்தார் பிரதமர் மோடி.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டங்கள்

என்பதால் விவசாயிகள் கடுமையாக அதை எதிர்த்தனர்.

அக்டோபர் 3, 2021 அன்று உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்ப்பூரில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளால் முற்றுகை

போராட்டம் நடத்தப்பட்டது.


அப்போது வெறிகொண்டு விவசாயிகள் மீது காரை ஏற்றினார் மத்திய பிஜேபி அமைச்சரின் மகன். இதில் விவசாயிகள், டிரைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அமைச்சரின் மகன் துப்பாக்கியில் சுட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் மொத்தம் 750 உயிரிழந்துள்ளனர். இதில் அமைச்சர் மகனால் கொல்லப்பட்டவர்களும் அடக்கம். 

இத்தனை உயிர்களை பலிவாங்கியிருக்கும் சூழலில் ஞானோதயம் பெற்றவராக சட்டங்களை வாபஸ் வாங்கியுள்ளார் மோடி.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.