சென்னைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எச்சரிக்கை!!

 


சென்னைக்கு தென்கிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே, புதுச்சேரிக்கு மேற்கே 170 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடசென்னை அருகே கரையை கடக்கும் என அந்த மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னையில் 40 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வரை தரைக்காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.