19 வயது இளைஞன்பரிதாப பலி!

 


கிருலப்பனை எட்மன்டன் வீதியில் பேஸ்லைன் வீதியில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து 19 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் நீர் விநியோகம் செய்யும் குழாய்கள் தொடர்பான சேவைகளை மேற்கொள்வதற்காக குழி தோண்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று (12) காலை குழிக்குள் இருந்த மண்ணின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததை அடுத்து குறித்த இளைஞன் அதில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய நீர் சபை திட்டத்தில் அங்கம் வகித்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.