மனைவி சிறையில் உயிரிழந்தவரின் உடலை ஏற்க மறுப்பு!

  


பொலிஸ் நிலையத்தில் உள்ள சிறையில் நபர் ஒருவர் உயிரிழ்ந்த நிலையில் அவரின் உடலை பெற்றுக்கொள்ள மனைவி மறுத்துவிட்டதாக பனாமுர பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பனாமுர, வெலிபோதயாய பகுதியை சேர்ந்த 38 வயதான இந்திக்க ஜயரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி தம்மை தந்தை தாக்கியதாக மகள் பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில் சந்தேக நபரான தந்தையை பொலிஸார் கைது செய்யபட்டிருந்தார்.

மேலும், குறித்த நபர் உயிரிழந்த போது கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதாக பனாமுர பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை விசேட சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு சடலத்தின் பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதேவேளை உயிரிழந்த நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் ஏற்கனவே இரண்டு தடவைகள் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபருக்கு எதிராக மனைவி மற்றும் பிள்ளைகளை தாக்கியமை தொடர்பில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மரணித்தவரின் உடலை ஏற்க அவரது மனைவி மறுத்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, உயிரிழந்தவரின் சகோதரி அவரது சடலத்தை பெற்றுக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.