ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!


 இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்களே உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக புலனாய்வு விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்தார்.


கடந்த நாட்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படும் நிலையில் அதனை குழப்பும் வகையில் எதிரணி எம்.பிகள் பொய் கதைகளை தெரிவித்து வருகின்றனர்.


சஹ்ரானின் மனைவி ஹாதியா வழங்கிய வாக்குமூலத்தில் புலனாய் அதிகாரிகள் எவரும் சஹ்ரானை அவரது வீட்டில் சந்தித்ததாக குறிப்பிடவில்லையென தெரிவித்த அவர், புலனாய்வு அதிகாரிகளுக்கும் சஹ்ரானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது உறுதியாகியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.