கொள்ளுப்பிட்டிக்கு அருகில் கடும் வாகன நெரிசல்!!
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டி அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மையப்படுத்தி, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கொள்ளுப்பிட்டியிலும், அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வீதிகளிலும், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களில் இருந்து கொழும்புக்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை