மட்டு முன்னாள் மேயர் சிவகீதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!


மட்டக்களப்பில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வாரன சிவகீதா பிரபாகரனை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.


மட்டக்களப்பு திருகோணமலை வீதியில். இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்பாக அமைந்திருந்து மாநகர சபை முன்னாள் மேயரான சிவகீதாவின் தங்கு விடுதியில் இயங்கி வந்த விபசார விடுதியை கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி பொலிஸார் முற்றுகையிட்டு அங்கு விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் உட்பட விடுதியை நடத்திவந்த குற்றச்சாட்டில் சிவகீர்த்தாவையும் கைது செய்தனர்


பின்னர் அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


இதனைத் தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் புதன்கிழமை குறித்த வழக்கை விசாரணை ஏடுத்துக் கொண்ட நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னாள் மாநகரசபை மேயரை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.