ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட கோரிக்கை!!

 


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசேட கோரிக்கை ஓன்றை முன்வைத்துள்ளது.


வெற்றிடமாகியுள்ள, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைமைப் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறு கோரியுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு இது தொடர்பிலான கடிதமொன்றை சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பி வைத்துள்ளது.


பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகியோருக்கும் இந்த கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.