28 கிலோ எடையுடைய மஞ்சள் மூடை!!
கடற்படையினரால் அனலைதீவு கடலில் மிதந்து வந்த 28 கிலோ எடையுடைய மஞ்சள் மூடையொன்று, இன்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அனலைதீவு கடலில் சந்தேகத்திற்கு இடமான மூடையொன்று, இன்று காலை மிதந்து வந்துள்ளது.
அதனை கடற்படையினர் எடுத்து பிரித்துப் பார்த்தபோது, அதில் மஞ்சள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மஞ்சள் மூடை எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை