மாவீரர் தினம் அனுஸ்டிக்க வவுனியாவிலும் தடை!!
மாவீரர்தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவினை வழங்கியுள்ளது.
தமது பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் 29 ஆம் திகதி வரை மாவீர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியினால் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கமைய வவுனியா நீதின்றம் குறித்த 8 பேருக்கும் தடை உத்தரவினை வழங்கியுள்ளது.
அந்தவகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி அனந்தன், சிவமோகன், காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கத்தினை சேர்ந்த கோ. ராஜ்குமார், கா.ஜெயவனிதா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கயேந்திரகுமார் அல்லது கயன், சு.தவபாலசிங்கம், செ.அரவிந்தன் ஆகியோருக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த நபர்கள் வவுனியா பொலிஸ் பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதியில் இருந்து 29 ஆம் திகதி வரை மாவீரர் நிகழ்வை அல்லது அதனுடன் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களை எதிர்வரும் 12 மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை