கசிப்பு சவப் பெட்டிக்குள் வைத்து வியாபாரம்!!
பாணந்துறையில் சவப் பெட்டிக்குள் வைத்து கசிப்பு வியாபாரம் செய்துவந்த சவப்பெட்டி தயாரிப்பாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில்,
சந்தேக நபர் பல இடங்களுக்கு சவப்பெட்டிகளை விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறி அதற்குள் கசிப்பு போத்தல்களையும் கொண்டு சென்றுள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அவரது சவப்பெட்டி தயாரிப்பு நிலையத்தினை பொலிஸார் சோதனை இட்டுள்ளனர்.
இதன்போது 16,000 மில்லி கோடா, 5 கசிப்பு போத்தல்கள், எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிவாயு அடுப்பு அடங்கிய 8 பரல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மற்றும் சவப்பெட்டி தயாரிக்கும் பகுதியின் மையத்தில் ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் பீப்பாய்கள் மற்றும் பிற உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
விசாரணையின் போது, சந்தேக நபர் வடிகட்டப்பட்ட கசிப்பு போத்தல்களை, சவப்பெட்டிகளை கொண்டு செல்வதாக கூறி அவற்றை பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைதான 32 வயதான சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை