சிங்களக் குடியேற்றத்தின் இலக்கு - குடும்பி மலை தொப்பிகல் மலை.!


கல் தோன்றிய காலத்தில் இருந்தே இத்தப் பிரதேசத்தில் இருக்கும் குசலான மலை, கேவர் மலை, தொப்பிகல் மலை, கார் மலை, குடும்பி மலை, நாகம்பு மலை, ரெண்டு கல் மலை, படர் மலை, மண் மலை போன்ற பல மலைகளில் இதுவும் ஒன்று. 


பெரிய மலைகள் என்று இல்லாமல்,மலைக் குன்றுகள் என்றே சொல்லாமல்.


  A-15 திருமலை வீதியல் மட்டக்களப்பில் இருத்து 24வது KM தூரத்தில் வரும் கிரான் சத்தியில் இருத்து , புலி பாய்ந்தகல் வீதியில் வடமுனையை நோக்கிச் செல்லும் பாதையில் 26வது KM பிரிந்து 6-7KM சென்றால் குடும்பி மலைக் கிராமம் இருக்கின்றது.



வரலாற்று சிறப்பு மிக்க எந்த தடயங்களும் இல்லா விட்டாலும், அன்மைக் கால வரலாற்றில் இடம் பிடித்து விட்ட ஒரு மலையாகவும். பெயராகவும், இந்த தொப்பிக் கல் மலைப் பிரதேசம் இடம் பெற்று விட்டது.


  தொப்பிக்கல் மலை சம்பந்தமாக மயக்கமான தெளிவற்ற நிலை பலரிடமும் இருக்கின்றது.


 1977 ம் ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கள அரசினதும், பாதுகாப்பு படைகளினதும், பேசு பொருளாக இந்த மலை இருந்து வருகின்றது.


திடீர் என்று 2006 ம் ஆண்டு இந்த தொப்பிக் கல் மலைப் பிரதேசம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்ததோடு ( google ) வலயத்தளத்திலும் தேடப்படும் ஒரு பொருளாக இந்தப் பிரதேசம் மாறியது.       


அத்தோடு உள்ளுரிலும், அண்டைய நாடுகளில் இருந்தும் இந்தப் பிரதேசத்தை எல்லோரும் ஆவலோடும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். 


 என்ன நடக்கின்றது ? எப்படி நடந்ததது ? என்ற பல கேள்விகள் எல்லோருடைய மனங்களையும் கிளறிக் கொண்டு இருந்தது.

போதாக்குறைக்கு இலங்கை அரசாங்கமும், இராணுவத்தினரும், அரச ஊடகங்கள் ஊடாக தொப்பிக் கல் மலைப் பிரதேசம் பற்றியே பேசிக் கொண்டு இருந்தது.


அத்தோடு இலங்கை மத்திய வங்கியும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து தொப்பிக்கல் மலை என்று, குடும்பி மலையின் படத்தை  1000 ம் ரூபாய் நாணயத்தாளில் பதிவிட்டு அந்தப் பிரதேசத்தில் அரச படையினர் சிங்கள கொடியைப் பறக்க விடுவது போன்று அதி தீவிரமாக ஏற்றிக் கொண்டிருப்பதாக சாட்சிப்படுத்தி இருந்தது இது ஒரு முக்கியத்துவம் மிக்க வரலாற்றுப்பதிவாக சிங்கள அரசு பதிவிட்டிருந்தது.


இந்தக் கொடி ஏற்றப்படுவதற்க்கு முன் இங்கே இந்தப் பிரதேசத்தில் பறந்து கொண்டிருந்தத புலிக் கொடி பற்றியும், அதன் வரலாற்று தடம் பற்றியும் ஆய்வாளர்களை தேடிப் பார்க்க தூண்டிய ஒரு நிகழ்வாக இதைப் பார்க்கலாம்.


முதலில் தொப்பிக்கல் மலை, குடும்பி மலை, இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தூரம் என்பவற்றைப் பார்ப்போம்.


இந்தக் குடும்பி மலை, கிரான் சந்தியில் இருந்தது 26 வது மைல் கல்லில் இருந்து குறுக்காக 6 km  தூரத்தில் இருக்கின்றது.


 சாதாரணமாக ஒரு சூடு நெல் கதிர்களை அறுத்து குவித்து வைப்பது போன்று தோற்றத்தில் இருக்கும், அடி வாரம் அகன்றும் விரிந்தது வட்டமாகவும், உச்சியில் ஒரு கல்லும் உடையாது, இந்த உச்சிக் கல் தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு குடும்பியைப் போல     ( பிராமணர்கள் கட்டும் குடும்பியைப் போல ) இருக்கும். இந்த தோற்றத்தை தூரத்தில் இருந்து பார்த்தல் தெளிவாகத் தெரியும்.


தொப்பிக்கல் மலை என்பது அதே பாதையில் மியான் குளச் சந்தியில் இருந்து 30 வது  km ல், பிரிந்து தென் கிழக்குப் பக்கமாக 5 km சென்று பெரிய மியான் கல் வழியாக வெள்ளைக் கல் மலை, பால வட்டவான், மயிலத்த மடு, மாதவணை போன்ற காட்டுப் பிரதேசங்களை அண்டியதாக கிரானில் இருந்தது சுமார் 50 mk  தூரத்தில் இருக்கின்றது.


அதே போல் செங்கலடிச் சந்தியில் இருந்து பதுளை வீதியில் சென்று மேற்குப் பக்கமாக, மாவடி ஓடை, புலுட்டு மான் ஓடை, வழியாகவும், ( சரியான பாதை இல்லை ) செல்லலாம்,


 பொலன்னறுவ மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு – திருமலை வீதியில் மன்னப்பிட்டிச் சந்தி ஊடாக அருகம்பல என்ற சிங்கள கிராமத்தை தாண்டி கிழக்குப் பக்கமாக, மாந்தலை ஆற்றரைக் கடந்தும் தொப்பிக்கல் மலைக்குப் போகலாம்.



 இது வட்டவடிவம் அல்லாத முன் பக்கத்திற்க்கு மட்டும் முனை வைத்த ஒரு தொப்பியை வைத்தது போன்று தோற்றத்தில் இருக்கும், இந்தப் பிரதேசத்தில் இன்னும் ஒருவரும் குடியேற வில்லை.


ஆனால் நீண்ட காலமாக வந்தாறு மூலை, சித்தாண்டி, கிரான் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பருவ காலத்தில் மாடுகள் தங்கள் கால் நடைகளை மேய்ப்பதற்க்காக இங்கு வருவார்கள்,


 இந்தப் பகுதி நீண்ட காலமாக தமிழர்களின் கால் நடைகள் மேய்க்கும் மேய்ச்சல் தரையாகவே பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது, ஆனால் யுத்தம் முடிந்த பிறகு பெரும் பான்மை இனத்தவர்கள் மியான் கல், மாந்தலை ஆற்றைக் கடந்தது வந்து இந்த பிரதேசத்தில் இருந்த காடுகளை அழித்து நெல்லும், வேறு உப உணவுப் பயிர்களும் செய்தார்கள்,


அத்தோடு இங்கு உள்ள தமிழர்களின் கால் நடைகளை துப்பாக்கியால் சுட்டும், சுருக்கு வைத்துப் பிடித்தும், அநியாயம் செய்தார்கள்.இதைக் கேட்க்கச் சென்ற தமிழர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள், கால் நடைகளை கட்டிவைத்து நட்ட ஈடும் அறவிட்டார்கள்,


இவர்கள் காடுகளை அழித்த போது வன இலாகாவினர் கண்டு கொள்ளவில்லை, இவர்களுக்கு உதவியாகவும், பாதுகாப்பாகவும் மாந்தலை ஆற்று ஓரத்தில் முகாம் அமைத்து பாதுகாப்புப் படையினர் இருந்தார்கள்,


இந்த மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கும், அத்து மீறிய குடி யேற்றத்துக்கும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ.கி.துரைராசசிங்கம் அவர்கள் நீண்ட காலமாக பல முயற்சிகளை எடுத்து பல தரப்பினர்களிடம் பேசி தற்போது ஒரு முடிவுக்கு வத்திருக்கின்றார்கள், இதன் படி ஒரு பெரிய காவலரண் அமைக்கப்பட்டதோடு, இங்குள்ள கால் நடை வளர்ப்போருக்கு பாதுகாப்பும், கால் நடைகளுக்கான குடிநீர் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த இரண்டு மலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களே, தொப்பிக்கல் மலையின் மறு பெயர் தான் குடும்பி மலை என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள், இந்த மயக்கத்தை ஏற்படுத்தியது இலங்கை அரசாங்கமும், படைகளுமே ஆகும்,


குடும்பி மலையிச் சுற்றி, மீரானக் கடவை, சின்ன மியான்கல், பெரிய மீயான்கள் குளம், கிரான் வட்டை, அசுரவணச் சோலை, போன்ற பல கிராமங்கள் இருக்கின்றன.


1960 ஆண்டு காலப் பகுதியில் சித்தாண்டி, கிரான், சந்திவெளி, போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள், காடுகள் வெட்டி சேனைப் பயிரும், வேளான்மையும் செய்து வந்தார்கள். 1970 ம் ஆண்டு காலப் பகுதியில் தேக்கு மரம் நாட்டும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி பலருக்கு இங்கே குடியேற வாய்ப்புக்கள் கிட்டியது.


1977 ம் ஆண்டு காலப் பகுதியில் ஒரு பௌத்த பிக்குவின் தலைமையில் ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் இப்பகுதியில் கொண்டு குடியேற்றப்பட்டு தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தமிழர்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டார்காள். இந்தக் குடியேற்றத்திற்க்கு பொலன்னறுவை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அதி தீவிரமாக செயல்பட்டார், அத்தோடு அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பும் இருந்தது.


இந்தக் காலப்ப் பகுதியில் “ பொடியன்களின் “ ஆத்திரம் மேலோங்கியதால், இந்ததக் குடியிருப்புக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டதோடு, குடியேற்ற வாசிகளும் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.


குடுப்பி மலையை அண்டிய கிராமங்களில் எல்லாம், சின்ன மீயான்கல், பெரிய மீயான்கல், ஆகியவற்றில் 69 குடும்பங்களும் எனயா  பகுதிகளில் எல்லாம் சேர்த்து மொத்தம் 169 குடும்பங்களைச் சேர்ந்த 774 பேர் குடியிருக்கின்றார்கள்,


குடும்பி மலைக் குமரன் வித்தியாலயத்தில் 14 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் படிக்கின்றார்கள் இது ஒரு ஆரம்பப் பிரிவுப் பாடசாலையாகும்,


இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த:-        கோவிந்தமூர்த்தி  பிரசாகினி , பரமகுமார்  யசாஜினி,  பொன்னுத்துரை  சரோஜினி, சற்குணாந்தம்  சுலக்சனா  ஆகியோர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை மேற்க்கொண்டு வருகின்றார்கள்.


மடுவடிப் பிள்ளையார்,

முத்து மாறி அம்மன், 

கண்ணகி அம்மன்,

வேங்கையடி முருகன்,  போன்ற ஆலயங்களையும் கட்டி வழிபட்டு வருகின்றார்கள்


மியான் கல் குளம் 1600 ஏக்கர் வயல் நிலத்திற்கு நீர் பாச்சக் கூடிய குளமாகும், இங்கு தொண்டு நிறுவனங்களினால் குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டிருக்கின்றது, 42 அங்கத்தவர்களைக் கொண்ட மீனவர் சங்கமும் இங்கு இயங்கி வருகின்றது,


சமுர்த்திச் வங்கிச் சங்கம், வேல்ட் விசன், போன்ற அமைப்புக்களால், மீன் பிடி உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது மீன் பிடித்தல், கால் நடை வளர்த்தல், சேனைப் பயிர், விவசாயம் போன்ற தொழில்களின் ஊடாக இந்த மக்கள் வருவாயைத் தேடுகின்றனர்,


 இவர்களின் முக்கிய பிரச்சனைகளாகக் கருதப் படுவது மருத்துவமே மருத்துவ வசதி என்பது மருந்துக்குக்கூட இல்லாத நிலையே, இது ஒரு பெரிய குறையாகும், போக்குவரத்து என்பது முக்கியமானது, பொதுப் போக்குவரத்து வசதி இல்லை.


 பொதுப் போக்குவரத்து, குடி நீர்ப்பிரச்சனை, யானை வேலி போன்ற பிரச்சினைகள், தீர்க்கப்படுமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கைத் தரம் மேலோங்கும்.


யுத்த காலத்தில் விடுதலைப் போராட்டத்தோடு இந்த மக்கள் இரண்டறக் கலந்திருந்தார்கள், பல போராளிகளையும், மாவீரர்களையும் தந்தமண் இந்தமண்  யுத்த அழிவுகளின் தடங்களையும் இன்றும் இங்கே காணலாம்,


 யுத்தம் முடிந்த பின்னர் இந்தப் பகுதி ஒரு ஆக்கிரமிப்புப்  பிரதேசமாகவே இருக்கின்றது, மீயான் கல் குளச் சந்தியில் பெரியதொரு ராணுவ முகாமும், வசதிகளுடன் கூடிய உல்லாச விடுதியும் இருக்கின்டறது, இந்த விடுதியை ராணுவத்தினரே நடத்தி வருகின்றார்க. 


 கிரான் ஆற்று ஓரம் இருந்து, புலி பாய்ந்த கல், தரவை, நெடும் பாதை எங்கும் ராணுவ முகாம்களும், காவல் அரண்களும் இன்று இங்கு இருப்பதைக் காணலாம்.  

ஊரவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.